×

மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஷெகாவத்துக்கும் கொரோனா உறுதி

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. முதலில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று குணமான அவருக்கு, மீண்டும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இவரை தவிர, மேலும் 3 அமைச்சர்களுக்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கும் நேற்று தொற்று உறுதியானது. இது பற்றி டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனை செய்து கொண்டதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,’ என்று கூறியுள்ளார்.


Tags : Shekhawat ,Corona , Union Minister of Water Resources Shekhawat, Corona,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!